முதலமைச்சர் இஸ்ரேல் செல்வதில் தவறு இல்லை: ஹெச்.ராஜா

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 02:54 pm
chief-minister-is-not-wrong-in-going-to-israel-h-raja

நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் இஸ்ரேல் செல்வதில் தவறு இல்லை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக 13 நாள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி  நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். 

அப்போது, தன்னுடைய வெளிநாட்டு பயணம் தொடரும் என்றும் அடுத்த பயணமாக இஸ்ரேல் செல்ல இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நீர் பாசனம் தொடர்பான நவீன முறையை அறிந்துகொள்ள இஸ்ரேல் செல்ல இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். 

முதலமைச்சர் இஸ்ரேல் செல்வதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில்,  நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் இஸ்ரேல் செல்வதில் தவறு இல்லை என்றும், தமிழக அரசு நீர் மோலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்; தடுப்பணைகளைக் கட்ட வேண்டும் என்றும் திருமயத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டியளித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close