’நான் நிரந்தர தளபதி; வைகோ போர்வாள்’

  Newstm Desk   | Last Modified : 15 Sep, 2019 11:09 am
how-i-am-the-permanent-commander-vaiko-warlord

’திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ; அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோதான்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இதன்பின் பேசியபின் ஸ்டாலின், ‘திமுகவுக்கு பக்கபலமாக வைகோ இருக்கிறார், அவருக்கு திமுக சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ; அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோதான். நீர் அடித்து நீர் விலகாது என்பதுபோல் நாம் ஒன்றாகி உள்ளோம். வைகோ தனது உடல்நலத்தை கொஞ்சம் பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது; ரயில்வே, தபால் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள். தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும் மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடைபெற்று வருகிறது’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close