‘தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100% வரி விலக்கு’

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2019 07:46 pm
100-tax-exemption-for-electric-vehicle-manufactured-in-tamil-nadu

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும் என்று, முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள புதிய மின்சார வாகன கொள்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அதில், மின்சார வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 15% முதலீட்டு மானியமாக வழங்கப்படும். தமிழகத்தில் முதற்கட்டமாக மின்சாரத்தால் இயங்கும் 525 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் இன்னும் சில மாதங்களில் இவை செயல்பாட்டிற்கு வந்துவிடும். இவற்றுக்கான சார்ஜர் மையங்களும் தேவைக்கேற்ப அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close