நானும் எடப்பாடி பழனிச்சாமியும் நல்ல புரிதலோடு  இருக்கிறோம், எங்களை பிரிக்க வேண்டும் என்கிற முயற்சி நடக்காது : ஒ.பன்னீர் செல்வம்

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2019 09:52 pm
deputy-chief-minister-o-pannirselvam-says-he-and-the-chief-minister-palanisamy-cannot-separate

தன்னையும், முதலமைச்சர் பழனிசாமியையும் பிரிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், ‘முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்தது குறித்து  வெள்ளை அறிக்கை கேட்கும் ஸ்டாலின், ஆட்சி காலத்தில் கூவத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக  சிங்கப்பூர் சென்றார். ஆனால் அது இன்னும் தூய்மைப்படுத்தப்படவில்லை. தி.மு.க ஆட்சியில் எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்ட போது எத்தனை முறை வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளார்.

கருப்பு பணத்தை மாற்றுவதற்காக வெளிநாடு சென்றோம் என கூறுவது ஜமுக்காலத்தில் வடிக்கட்டிய பொய். ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த ஒரு திட்டம்தான். அது இடையில் சில காலம் இல்லாமல் இருந்தது. தற்போது தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மீண்டும் அதை நடைமுறைப்படுத்துகிறோம்.

தமிழ்நாடு அரசின் கொள்கை இரு மொழி கொள்கை தான். அதை தான் தொடர்ந்து பின்பற்றுவோம். நானும் எடப்பாடி பழனிச்சாமியும் நல்ல புரிதலோடு  இருக்கிறோம்.எங்களை பிரிக்க வேண்டும் என்கிற முயற்சி நடக்காது’ என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close