அமித்ஷாவின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது: நல்லகண்ணு

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2019 10:53 pm
amit-shah-s-comment-is-shocking-nallakannu

இந்தியை நாடு முழுவதும் கொண்டு வருவோம் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து அதிர்ச்சியளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், ‘இந்தியை நாடுமுழுவதும் கொண்டு வருவோம் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வர வழிவகை செய்யாமல் இது போன்ற கருத்தை அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவரவர் தாய் மொழிதான் சிறப்பு. ஆனால், அதை மறந்து நாட்டின் உள்துறை அமைச்சகம் செயல்படுகிறது. ஏற்கனவே இரு முறை இந்தியை ஆட்சி மொழியாக கொண்டு வர முயற்சித்தார்கள். அது தோல்வி அடைந்தது. தற்போது மத்திய அரசு மீண்டும் இந்தியை ஆட்சி மொழியாக்க முயற்சிக்கிறார்கள்.இந்த முறையும் அது தோல்வி அடையும்.

பொருளாதார நெருக்கடி போன்ற பிரதான பிரச்னைகளிலிருந்து மக்களையும், எதிர்க்கட்சிகளையும் திசை திருப்பவே ஒரே மொழி, ஒரே ரேஷன் போன்ற அறிவிப்புகள் ஆகும். 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது தேவையற்ற ஒன்று. இது ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் செயலாகும்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close