பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: அதிமுக பிரமுகர் கைதாக வாய்ப்பு 

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2019 06:26 pm
subasree-dies-as-banner-falls-aiadmk-leader-arrested-chance

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 13ஆம் தேதி பேனர் விழுந்து அதனால் ஏற்பட்ட விபத்தில் குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது இதுவரை 279,304(ஏ), 336 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் மீது 308 பிரிவின் கீழ் பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜாமீனில் வெளிவரமுடியாத மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் பிரிவின் கீழ் ஜெயகோபால் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close