சுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 11:26 am
dmk-donates-rs-5-lakh-to-subasree-family

பேனர் விழுந்து விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

சென்னை குரோம்பேட்டையில் சுபஸ்ரீ குடும்பத்துக்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில், ‘திமுக அறக்கட்டளை சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. நாங்கள் எவ்வளவு ஆறுதல் அளித்தாலும் சுபஸ்ரீ பெற்றோருக்கு மனம் ஆறுதல் அடையாது. பேனர் கலாசாரமே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதே என் கருத்து. நினைத்தால் பேனர் வைத்தவரை கைது செய்திருக்கலாம்; ஆனால் கைது செய்யவில்லை’ என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close