5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: யாரும் பெயில் ஆக மாட்டார்கள்

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 01:19 pm
5th-and-8th-class-general-exams-nobody-becomes-fail

’5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு 3 ஆண்டுகளுக்கு தேர்வு நடக்கும்; ஆனால் யாரும் பெயில் ஆக மாட்டார்கள்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

’5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சென்னையில் அளித்த பேட்டியில், ’5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் அனைவரும் தேர்ச்சி பெற்று, அடுத்த வகுப்பிற்கு செல்வார்கள். 3 ஆண்டுகளுக்கு தற்போதையே நிலையே தேர்வு முறையில் தொடரும். 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் தேர்வில் தவறியவர்களும் அடுத்த வகுப்பிற்கு செல்வார்கள். 3 ஆண்டுக்கு பிறகு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்’ என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், காலாண்டுத் தேர்வு வினாத்தாள் வெளியானதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close