லாரி மோதியதாலயே மின்கம்பம் சேதமடைந்து சேது உயிரிழப்பு: அமைச்சர் தங்கமணி

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 03:11 pm
sethu-dies-after-collision-with-lorry-minister-thangamani

சென்னை சிட்லபாக்கத்தில் லாரி மோதியதாலயே மின்கம்பம் விழுந்து சேது என்பவர் உயிரிழந்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், ‘சிட்லபாக்கத்தில் பழுதடைந்த மின்கம்பம் விழுந்த சேதுராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறுவது தவறு. கான்கிரீட் லாரி மோதியதால்தான்  மின்கம்பம் விழுந்து சேதமடைந்து அதனால் சேது உயிரிழந்துள்ளார். மின்கம்பம் மீது மோதிய லாரியை கண்டறிய சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. முகலிவாக்கத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பள்ளம் தோண்டியதால் தெரியாமல் விபத்து நிகழ்ந்துவிட்டது. தரமற்ற மின்கம்பங்கள் என்பதே கிடையாது; அனைத்து மின்கம்பங்களும் தரமாகவே உள்ளன. சேதமடைந்த கம்பங்களை 10 நாட்களுக்குல் சரி செய்ய கூறியிருக்கிறோம்’ என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close