திமுகவின் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 05:30 pm
congress-should-take-part-in-dmk-s-struggle-p-chidambaram

இந்தி குறித்து அமித்ஷா கூறியதற்கு எதிராக நாளை மறுநாள் திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சிதம்பரம் ட்விட்டரில் மேலும், ‘தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக்கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழிதான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம். இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் திகார் சிறையில் இருக்கிறார். அவரின் சார்பாக அவரது குடும்பத்தினர் இந்த பதிவுகளை இட்டுள்ளனர். 
 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close