அதிமுக அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 07:35 pm
dmk-leader-stalin-congratulates-admk-minister

கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன், ஆய்வுப்பணிகாக உழைத்த அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினின் பாராட்டு செய்தியில், ’கீழடிக்கு அருகே கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு நடத்த திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கீழடி அகழாய்வு நடைபெறும் இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும். கீழடிக்குப் பிறகு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் உள்ள சனோவ்லி பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் வாட் நகரில் அறிவித்ததை போன்று கீழடியிலும் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். கி.மு.6-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் வெளியாகி உள்ளன’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close