'கெத்து' தமிழ் வார்த்தை என்பதை கண்டுபிடித்த அதிமுகவிற்கு வாழ்த்துக்கள்: திமுக

  அனிதா   | Last Modified : 21 Sep, 2019 09:07 am
congratulations-to-the-aiadmk-who-invented-the-tamil-word-gethu-dmk

கெத்து தமிழ் வார்த்தைதான் என்பதை கண்டுபிடித்துள்ள அதிகமுகவிற்கு வாழ்த்துக்கள் என திமுக மாநிலங்களவை எம்.பி வில்சன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கெத்து தமிழ் வார்த்தை தான் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறிய கருத்துக்கு, எம்.பி. வில்சன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 2016 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகிய கெத்து படத்திற்கு கேளிக்கை வரி சலுகை கோரப்பட்டது. அப்போது, அதிமுக அரசு கெத்து தமிழ் வார்த்தை இல்லை என கூறி சலுகை வழங்க மறுத்தநிலையில், தற்போது கெத்து தமிழ் வார்த்தை தான் கூறுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு கெத்து தமிழ் வார்த்தை தான் என கண்டுபிடித்துள்ளதற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close