இடைத்தேர்தல்: நாளை மறுநாள் அதிமுக நேர்காணல்!

  அனிதா   | Last Modified : 21 Sep, 2019 04:17 pm
by-election-admk-interview-on-monday

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டநிலையில், அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் நாளை மறுநாள்  நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்.21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செப்.23 ஆம் தேதி தொடங்கி செப்.30 தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக உறுப்பினர்கள் நாளை  விருப்ப மனு தாக்கல் செய்யலாம் எனவும், நாளை மறுநாள் விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் எனவும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும், விருப்பமனு தாக்கல் செய்த அனைவரும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும் எனவும் கட்சி தலைமை தெரிவித்துள்ளது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close