இடைத்தேர்தல்: இன்று முதல் விருப்ப மனு விநியோகம் 

  ராஜேஷ்.S   | Last Modified : 22 Sep, 2019 08:34 am
by-election-delivery-of-optional-petition-from-today

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக உறுப்பினர்கள் 22ஆம் தேதி விருப்ப மனு தாக்கல் செய்யலாம் எனவும், நாளை மறுநாள் விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் எனவும் அதிமுக தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்றும் நாளையு விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகின்றன. விருப்ப மனு கட்டணம் ரூ.25,000 ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close