ஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா?: கலாய்க்கும் செல்லூர் ராஜூ

  Newstm Desk   | Last Modified : 22 Sep, 2019 01:02 pm
is-stalin-enlightened-at-governor-s-house

ஆளுநர் மாளிகைக்கு சென்றுவிட்டு வந்த பிறகு ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா? என்று, இந்தி குறித்து அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்து, பின்னர் அதை கைவிடுவதாக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இவ்வாறு கிண்டல் செய்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
 

மதுரையில் அமைச்சர் அளித்த பேட்டியில், ஆளுநரின் ஆய்வு குறித்து கேள்வி எழுப்பிய திமுக, அவரது பேச்சை கேட்டு போராட்டத்தை கைவிட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், இந்தி தினத்தில் ப.சிதம்பரம் கூட இந்தி குறித்து பேசியுள்ளார் என்று கூறினார்.
 

மேலும், படம் ஓட வேண்டும், விளம்பரம் வேண்டும் என்பதற்காக நடிகர்கள் ஆயிரம் பேசுவார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close