574 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்: சத்யபிரதாசாஹூ

  அனிதா   | Last Modified : 23 Sep, 2019 01:27 pm
574-polling-station-will-be-set-up-election-commissioner

இடைத்தேர்தலுக்காக 574 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இது குறித்து பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ நாங்குநேரி தொகுதியில் 2.57 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதனடிப்படையில் அந்த தொகுதியில் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. 

இதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில் சுமார் 2.23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதனடிப்படையில் விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close