வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2019 05:12 pm
northeast-monsoon-precautions-chief-minister-s-order

வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், மழை காலங்களில் விழும் மரங்களை அகற்ற தேவையான ஆட்கள், இயந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும். மாநில பேரிடம் மீட்புப் படையை வலுப்படுத்த கூடுதல் உபகரணம், கருவிகள் வாங்க ரூ.30.27 கோடியும், மாநகராட்சி, மீன்வளத்துறைக்கு உபகரணங்கள் வாங்க ரூ.8.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் போதிய பொருட்களை இருப்பு வைக்க வேண்டும். பருவமழையின் போது தொற்றுநோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், மருந்துகளை இருப்பு வைக்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல தேவையான உபகரணங்களுடன் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பருமழை முன்னேற்பாடு குறித்து தலைமைச் செயலர் தலைமையில் முப்படை ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். மழைக்காலத்தில் உயிர்ச்சேதத்தை தவிர்க்க அனைத்துத் துறை செயலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close