கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்: திமுக வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2019 09:49 pm
the-world-class-museum-kizadi-dmk-urges

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் பாட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை கனிமொழி எம்பி, மத்திய அமைச்சரிடம் இன்று வழங்கினார்.

அக்கடிதத்தில் மேலும், ‘இந்திய வரலாற்றையே இனி தமிழர்கள் வரலாற்றில் இருந்து தான் முன்னோக்கி பார்க்க வேண்டும். வேளாண் தொழில்கள் காளைகள், மிருகங்களை தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைக்க கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். கீழடி அகழாய்வுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மதுரையில் தொல்பொருள் ஆய்வகம் அமைக்கவும், கீழடி அகழ்வாராய்ச்சிகள் தொடர வேண்டும் எனவும் மத்திய  அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close