டெங்கு: முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2019 02:13 pm
dengu-stalin-s-insistence-on-chief-minister

டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக அரசு எடுக்க வேண்டும். உயிர்களை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் வைத்திருங்கள். பொதுமக்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் குறித்த போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். திமுக மருத்துவ அணியினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்த வேண்டும்’ என்று ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close