இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

  அனிதா   | Last Modified : 25 Sep, 2019 10:41 am
by-election-aiadmk-candidates-announced

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெயர்களை கட்சி தலைமை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்கு நேரி தொகுதிகளில் வரும் அக்.2 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், விக்கிரவாண்டி மற்றும் நாங்கு நேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை கட்சி தலைமை அறிவித்துள்ளது. 

அதில், விக்கிரவாண்டி தொகுதியில் எம். முத்தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய செயலாளராக உள்ளார். அதற்கு முன்பு ஊராட்சி தலைவராகவும் பதிவி வகித்துள்ளார்.  

நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளராக  ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் போட்டியிடவுள்ளார். இவர் நெல்லை புறமாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக உள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close