முதலமைச்சர்கள் பழனிசாமி, பினராயி விஜயன் கூட்டாக பேட்டி

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2019 05:46 pm
chief-ministers-palanisamy-and-pinarayi-vijayan-were-interviewed-jointly

நீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் சேர்த்து தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், இரு மாநில மக்களும் பாகுபாடின்றி நீரைப் பெற்று பயன்படுத்தவே ஆலோசனை நடத்தியதாக முதல்வர் பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.

நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் – கேரளா சார்பில் இரு மாநில முதலமைச்சர்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதன்பிறகு, தமிழக முதலமைச்சர் பழனிசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அளித்த பேட்டியில், ‘நீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் சேர்த்து தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அந்த குழுவை இரு மாநில தலைமைச் செயலாளர்கள் வழி நடத்துவார்கள். 6 மாதங்களுக்கு ஒருமுறை இருமாநில தலைமைச் செயலாளர்களும் ஆலோசனை நடத்துவார்கள்’ என்றார்.

தமிழக முதலமைச்சர் பழனிசாமி அளித்த பேட்டியில், ‘கேரள – தமிழகம் இடையே 15 ஆண்டுகளுக்கு பிறகு நீர்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. நதிநீர் பங்கீடு, புதிய ஒப்பந்தங்கள் குறித்து பேச இரு மாநிலங்களை சேர்ந்த தலா 5 பேரை கொண்ட குழு அமைக்கப்படும். ஆனைமலையாறு, சிறுவாணி பிரச்னை குறித்தும் இந்த குழு பேசி முடிவெடுக்கும். பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் குறித்து பேசவும் தனி குழு அமைக்கப்படும். இரு மாநிலங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நீர் பங்கீடு குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்’ என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close