திமுக மீண்டும் ஆட்சியமைக்குமா?: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2019 12:54 pm
dmk-minister-jayakumar-teased-dmk

கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தால்தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை கிண்டல் செய்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறும். யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது என்பது சிம்ம சொப்பனம்தான். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தால்தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்’ என்று கிண்டலடித்துள்ளார்.

மேலும், தமிழை ஆழ்ந்து கற்றவர்கள் அரசு பணிக்கு வர வேண்டும் என்பதற்காகவே குரூப்-2 தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close