பாஜக - அதிமுக கூட்டணி தொடரும்: முதலமைச்சர் பழனிசாமி 

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2019 04:18 pm
bjp-aiadmk-alliance-will-continue-chief-minister-palanisamy

பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் இன்று நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமினை துவக்கி வைத்து முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார். 

இதன்பிறகு ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், ‘கீழடியில் 4ஆவது மற்றும் 5ஆவது அகழாய்வு பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. கீழடியில் உரிய முறையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. டிஎன்பிஎஸ்சி என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு; அதற்குரிய அதிகாரத்தின்படி டிஎன்பிஎஸ்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் மோசடிகள் நடைபெறாத வகையில் அரசு விழிப்புடன் இருக்கும்’ என்றார்.

மேலும், ‘பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல்களில் அதிமுக போட்டியிடும் என கூட்டணிக் கட்சிகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். ஐநா பொதுசபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பேசியது பெருமை அளிக்கிறது’ என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.


newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close