‘பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மீது அதிகளவில் பற்று வைத்திருக்கிறார்’ 

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2019 02:55 pm
prime-minister-narendra-modi-heavily-leaning-on-tamil

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மீது அதிகளவில் பற்று வைத்திருக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக சென்னை வந்தார்.

இந்த நிலையில்,  GO BACK MODI என சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்வது தவறானது என்றும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மீது அதிகளவில் பற்று வைத்திருக்கிறார் என்றும், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறினார். மேலும், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close