கொள்ளுக்கு வாயை திறக்கும் குதிரையா தமிழர்கள்?

  பாரதி பித்தன்   | Last Modified : 01 Oct, 2019 11:16 am
special-article-about-iit

தமிழத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றியும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை விருப்ப பாடமாக  வைத்திருப்பது குறித்தும் ஒரே நேரத்தில் விவாதம் இறக்கை கட்டி பறக்கிறது. புதைந்து கிடக்கும் தமிழர்களின் பாரம்பரியத்தை  வெளிக்கொண்டு வரும் முயற்சி வரவேற்கும் தமிழக  அரசியல் கட்சிகள் ; இந்திய பாரம்பரியம் குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. 

அடுத்த தலைமுறை இதைத் தான் படிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் இவர்கள் எதற்காக இத்தனை கோடிகள் செலவு செய்து கீழடி அகழ்வாராய்ச்சி நடக்க வேண்டும், தொடர வேண்டும் என்று கூச்சல் இடுகிறார்கள் என்று தெரியவில்லை.

தமிழகத்தில் இதுவரை தொல்பொருள் ஆராய்ச்சி துறை, குடவாசல் பாலசுப்பிரமணின், திருச்சி டாக்டர் கலைக்கோவன், புதுக்கோட்டை முன்னாள் காப்பாட்சியர் ராஜாமுகமது போன்ற ஆர்வலர்கள் பல இடங்களில் தேடி அலைந்து பண்டை கால தமிழர்களின் வாழ்வியலை, அவர்கள் அன்றாட நடவடிக்கைகளை பல புத்தகங்களாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதை எத்தனை பேர் கடைபிடிக்கிறோம். சாதாரண மக்களை விடுங்கள் அரசு அமைக்க வாய்ப்பு உள்ளவர்கள் அதை எந்த அளவிற்கு கடைபிடிக்கிறார்கள்.

முன்னாள் தேர்தல் கமிஷனர் டிஎன் சேஷன் பதவி ஏற்கும் முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் உருத்திரமேரூர் கோயிலில் உள்ள 2 கல்வெட்டுகளை செய்து பார்க்க காஞ்சி பெரியவர் அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் தான் சேஷன் தேர்தல் சீர்திருத்தம் அமைந்தது. 

அதே போல சுப்பிரமணியம் சுவாமியிடமும் ஏதோ ஒரு கல்வெட்டை பார்த்து வரச் சொல்லிய காஞ்சி பெரியவர். அவரிடம் ஈவேரா போல அரசியலில் இருக்க வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பிவைத்தாராம்.

இதைப் போன்று பதவிக்கு வரும் போது நமது பாரம்பரியத்தை அறிந்து அதனை கடைபிடிக்கத்தான் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கே கடவுள் நம்பிக்கையே கிடையாது என்கிற போது இவற்றில் எல்லாம் நம்பிக்கையாக இருக்கும்.

இந்தியாவில் நாலந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையாக்கப்பட்டதும், இலங்கையில் யாழ் பல்கலைக்கழக நுாலகம் தீக்கிரையாக்கப்பட்டதும் வருங்காலத் தலைமுறையினர் தங்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காகத்தான்.

ஜெர்மானியர், ஆங்கிலேயர்கள் பல விதமான கட்டுபிடிப்புகளின் அடிப்படை இந்தியாவில் இருந்து எடுத்து செல்லப்பட்ட ஓலை சுவடிகள் தான். அவர்கள் இந்தியாவில் திருடி சென்ற அல்லது எடுத்து சென்ற கலைப்பொக்கிஷங்களை பக்தி பரவசத்தோடு அணுகாமல் அதில் உள்ள வற்றை ஆய்வு செய்தார்கள். பல கண்டு பிடிப்புகள் வந்தன.

அதே போல பகவத்கீதையை அண்ணாபல்கலைக்கழக மாணவர்கள் பக்தி நுாலாக படிக்காமல் தங்கள் துறை சார்ந்த விஷயங்களை அறிந்து. கொள்ளும் ஒரு வழியாக படித்தால் எதிர்காலத்தில் நம் மண்ணின் மணத்தோடு பொறியாளர்கள் வருகிறார்கள். அதே போல கீதையுடன் நிறுத்தி கொள்ளாமல் திருக்குறள், திருமந்திரம், அகஸ்தியரின் நுால்கள், அர்த்த சாஸ்திரம்  என்று சம்பந்தப்பட்ட துறையினருக்கு பாடமாக வைக்க சொல்லி வலியுறுத்தலாம்

திருக்குறள், அதர்த்த சாஸ்திரம் சொல்லும் அரசாட்சியை அனைவரும் அறிந்து இருக்க வேண்டும். இப்படி செய்வதற்கு பதிலாக பகவத் கீதை ஏன் பாடமாக இருக்கிறது என்று கேள்வி எழுப்புவது அறிவுடைய சமுதாயத்திற்கு நல்லது அல்ல.

இது பழங்கதைகள் இன்றைய நடைமுறைக்கு உதவாது என்று கருதினால் கீழடியின் ஆய்வை ஏறக்கட்டிவிடலாம். ஒரு அருங்காட்சியகம் அமைக்க இத்தனை கோடி செலவு என்பது நாடு இப்போதுள்ள .பொருளாதார சூழலில் வீண் வேலை. நம்மவர்கள் யோசிப்பது நல்லது.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close