கல்வி கண் திறந்த காமராஜர் நினைவு நாள் இன்று!

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2019 11:27 am
kamarajar-death-day

தமிழகம் கண்ட தங்க தலைவர், விருதுநகர் ஈன்றெடுத்த வீர செம்மல், இந்தியாவின் ஈடு இடையற்ற இமயம், எளிமையின் சிகரம் இதனை பெருமைகளும் சொந்தக்காரர் கர்ம வீரர் காமராஜர்.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், பெரிய அளவில் கல்வி பயிலாதவர். ஆனாலும், தனக்கே உரிய பட்டறிவாலும், அனுபவ ஞானத்தாலும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆழ்ந்து சிந்தித்து அதன்படி நடந்தார். 

சுதந்திரப் போராட்ட காலத்தில், காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும் பதவி வகித்தார். தமிழக முதல்வராக இருந்த இவர், ஏழைக்குழந்தைகள் கல்வி கற்க வசதியாக, பள்ளிகளில் மத்திய உணவு திட்டத்தை அமல்படுத்தினார்.

நாட்டின் பிரதமர் பதவியே இவரை தேடி வந்தபோதும், அதை ஏற்க மறுத்து, இந்திராவை பிரதமர் ஆக்கினார். இன்று தமிழகத்தின் தலை சிறந்த தலைவர்கள் ,விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் பலரும் காமராஜரின் திட்டங்களால் பலனடைந்து கல்வி பயின்றவர்களே.

விருதுநகரில், 1903 ஜூலை 15ல் பிறந்த இவர், சென்னையில் அக்டோபர் 2, 1975ல் காலமானார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close