‘பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு; பிக்பாஸ் வீடு அலிபாபா குகை போன்றது’

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2019 01:17 pm
the-bigboss-show-is-a-cultural-degeneration

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு என்று, கரை வேட்டிகளால் தமிழகம் கறை படிந்துள்ளது என கமல்ஹாசன் கூறியதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு; அந்த வீடு அலிபாபா குகை போன்றது. வசூல்ராஜா திரைப்படம் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன். கமல் ஒரு இன்ஸ்டண்ட் சாம்பர் போன்றவர்; திடீரென வருவார்; திடீரென என காணாமல் போவார்’ என்று கமலை அமைச்சர் விமர்சித்தார்.

மேலும், காங்கிரஸ் வறுமையானது என்று கே.எஸ்.அழகிரி கூறியது இந்தாண்டின் மிகப்பெரிய ஜோக் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close