பொருளாதார வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பே காரணம்: புதுச்சேரி முதல்வர்

  அனிதா   | Last Modified : 03 Oct, 2019 09:54 am
puducherry-cm-byte-about-economic-downturn

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய பிரதமர் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே காரணம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நியூயார்க்கில் பிரதமர் நரேந்திர மோடி தமிழின் பெருமையை எடுத்துரைத்ததை வரவேற்பதாவும், மத்திய அமைச்சர் அமித்ஷாவோ ஒரே நாடு ஒரே மொழி என முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாகவும் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய பிரதமர் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே காரணம் என குற்றம் சாட்டிய அவர், மோட்டார் வாகன தயாரிப்பு உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்படுவதாக குறிப்பிட்டார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close