கமல்ஹாசன் ஒரு அரசியல்வாதியா?: கமலை கடுமையாக விமர்சித்த அமைச்சர் 

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2019 08:08 pm
kamal-haasan-a-politician-minister-who-criticized-kamal

கமல்ஹாசன் ஒரு அரசியல்வாதியா? அவரின் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டுமா? என்று, கரைவேட்டி குறித்த கருத்துக்கு அமைச்சர் பாஸ்கரன் கமலை கடுமையாக விமர்சித்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைச்சர் பாஸ்கரனிடம் செய்தியாளர்கள், கமல்ஹாசனின் கரை வேட்டி குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, கமல்ஹாசன் ஒரு அரசியல்வாதியா? அவரின் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டுமா?’ என்று அமைச்சர் பதில் அளித்தார்.

மேலும், கமல்ஹாசன் இன்று ஒன்று பேசுவார், நாளை வேறு ஒன்றை பேசுவார் என்றும், அவரின் பேச்சை பெரிதாக எடுத்து கொள்ளக் கூடாது எனவும் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close