இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு 

  Newstm Desk   | Last Modified : 07 Oct, 2019 02:00 pm
bjp-support-for-aiadmk-in-by-election

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு என மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். இடைத்தேர்தால் தொடர்பாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்த சந்திப்பிற்கு பின் மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அந்த பேட்டியில், ‘நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு கொடுக்கும். இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜவினர் பிரச்சாரம் செய்வார்கள். பிரச்சாரம் மேற்கொள்ளும் பாஜக நிர்வாகிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்’ என்றார்.

மேலும், அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் பாஜகவினர் மிகத் தீவிரமாக செயல்படுவார்கள் என்றும், இரண்டு தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close