நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை நங்கநல்லூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் இந்துத்துவாவை பின்பற்ற சொல்லவில்லை என்றும் இந்து கோயில்களை தான் கும்பிட சொன்னதாகவும் தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்த அவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ரஜினியை பின்பற்றி ஆன்மீக அரசியலை நடத்த தொடங்கி விட்டதாக கூறினார்.
முன்னதாக, மதிமுகவினர் பெரும்பாலும் இந்துகள் என்றும் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளேன் என்றும் வைகோ கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Newstm.in