பேனர் வைப்பதை அரசியலாக்க வேண்டாம்: பொன்.ராதா

  அனிதா   | Last Modified : 05 Oct, 2019 10:43 am
don-t-politicize-the-banner-issue-pon-radhakirshnan

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி பேனர் வைப்பதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க மத்திய அரசின் சார்பில்தான் பேனர் வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், பேனர் வைப்பதற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் பேனர் வைப்பதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். 

தமிழகத்தில் பாஜக தலைவர் தற்போது நியமிக்கப்படாததால் இடைத்தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்க காலதாமதமானது என்றும், இடைத் தேர்தல் பிரச்சாரம் கூடிய விரைவில் நடக்கும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close