அதிமுகவினருக்கு தோல்வி பயம்: கே.எஸ் அழகிரி

  அனிதா   | Last Modified : 05 Oct, 2019 11:31 am
fear-of-failure-in-aiadmk-ks-alagiri

அதிமுகவினர் தோல்வி பயத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெளியூர் என விமர்சனம் செய்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " காங்கிரஸ் வேட்பாளர் வெளியூரை சேர்ந்தவர் என தோல்வி பயத்தில் அதிமுக விமர்சனம் செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொந்த தொகுதியில் போட்டியிட்டாரா என கேள்வி எழுப்பிய அவர், வெவ்வேறு தொகுதியில் தானே போட்டியிட்டார் என குறிப்பிட்டார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close