யாராலும் இரண்டு எஜமானர்களுக்கு அடிமையாக இருக்க முடியாது!

  பாரதி பித்தன்   | Last Modified : 05 Oct, 2019 03:40 pm
special-article-about-radhapuram-election-matter

இயேசு தன் சீடர்களிடம் உபதேசம் செய்யும் போது, யாராலும் இரண்டு  எஜமானர்களுக்கு அடிமையாக இருக்க முடியாது, ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து, மற்றவரிடம் அன்பு காட்டுவான். அல்லது ஒருவரிடம் ஒட்டிக் கொண்டு மற்றவரை அலட்சியம் செய்வான். நீங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் அடிமையாக இருக்க முடியாது என்றார். (மத்தேயு 6:24)

இதையும் மீறி, இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு ராதாபுரம் தேர்தல் வழக்கே சாட்சி.

2016ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வெற்றி பெற்றார். அவர் வெறும் 49 ஓட்டுகள்தான் அதிகம் பெற்றார். அவர் பெற்ற ஓட்டுகள் 60,590 அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு பெற்ற ஓட்டுகள் 60,541, இந்த தொகுதியில் 16பேர் போட்டியிடுகிறார். இங்கு நோட்டோ பெற்ற ஓட்டுகள் 1821.

தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவரை வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டால், அது பற்றி அவரிடம் கேள்வி எழுப்ப முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர மட்டுமே முடியும் என்று அங்கீகரிக்கப்படாத தகவல் ஒன்று உள்ளது. தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சித் தலைவர், அல்லது ஆர்டிஓ அளவிலான அதிகாரியாகத்தான் இருப்பார். தேர்தல் நடந்து முடிந்ததும், அவர் மாநில அரசுக்கு கட்டுப்பட்டவர். இந்த சூழ்நிலையில் தான் தேர்தல் நடக்கிறது.

ராதாபுரம் தேர்தலைப் பொருத்தளவில் திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். அதில் அவர் 203 தபால் ஓட்டுக்கள், 19,20,21வது சுற்று ஓட்டுகள் எண்ணப்படவில்லை என்று தன் தரப்பு வாதத்தில் குறிப்பிடுகிறார். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படவேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறே ராதாபுரத்தில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதில் சர்ச்சை ஏற்படவே, தபால் ஓட்டுகள் எண்ணுவது நிறுத்தப்பட்டு, இதர ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு அளித்திருக்க வேண்டும். அதன் பின்னர் இது குறித்து அப்பீல் மனு விசாரித்திருந்தால், நியாயம் நியாயமாக கிடைத்திருக்கும். இந்த வழக்கு ஒரு பெஞ்சில் நடக்கும் அதே நிலையில் இன்பதுரை மற்றொரு பெஞ்சில் மறு எண்ணிக்கை நடத்த கூடாது என்று வழக்கு தொடர்கிறார். இது ஒரு நீதிமன்றத்தில் விசாரணையில் மற்றொரு நீதிமன்றம் தலையீடு செய்கிறது. அதிலும் ஓட்டு எண்ணிக்கை நடத்தலாம் என்று தீர்ப்பு வருகிறது.

அதன் அடிப்படையில் இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக உயர் நீதிமன்றம்டில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒரு புறம் இது நடந்து கொண்டு இருக்கும் போதே இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில் உடனே உயர் நீதிமன்றம் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த கூடாது என்று சொல்லி இருக்கலாம். ஆனால் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் உயர் நீதிமன்றத்தில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 

இதில் ஓட்டு எண்ணும் அதிகாரிகள், வேட்பாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் இடம் பெற்றுள்ளனர்.அவர் அனைவருக்கும் இந்த மறு ஓட்டு எண்ணிக்கையின் முடிவு தெரிந்து இருக்கும். இந்த சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட் ஓட்டு எண்ணிக்கையின் முடிவை அறிவிக்க தடை விதிக்கிறது 

ஒரு சிறு குழுவிற்கு மறு ஓட்டு எண்ணிக்கை முடிவு தெரிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இந்த தடை பொருளற்றதாக மாறிவிட்டது.

இந்த வழக்கில் ஒரே நேரத்தில் இரு நீதிமன்றங்கள்  தலையிட்டு விசாரித்த காரணத்தால் அதன் நோக்கம் முழுவதுமாக சிதைந்துவிட்டது.

ஒருவேளை மறு எண்ணிக்கையில் தான் வெற்றி பெற்றேன் என்று தெரிந்தால் கூட அப்பாவு எம்எல்ஏவாக பதவி ஏற்க முடியாது. தான் தோல்வி அடைந்து விட்டேன் என்ற நிலை இன்பதுரைக்கு ஏற்பட்டாலும், அவர்  பதவியை ராஜினாமா செய்வதற்கு பதிலாக எம்எல்ஏவாகவே இன்னும் சில காலத்திற்கு தொடர்வார். இதற்கு மாறுபட்டு நடந்திருந்தால், தேர்தல் கமிஷனின் நேர்மையை, கடமை உணர்ச்சியை வெளிப்படுத்த இயலாமல் சந்தேக கண் கொண்டுதான் பார்க்க வேண்டி உள்ளது.

இதற்கு ஒரே காரணம் 2 எஜமானர்கள் ஒரு வேலைக்காரனை பயன்படுத்தியது தான். ஒரு வழக்கு குறிப்பிட்ட நீதிமன்றத்தில் நடக்கும் போது அப்பீல் என்ற பெயரில் அதில் குறுக்கிட்டு திசை திருப்பாமல் முழுமையாக தீர்ப்பு வரை காத்திருந்து, வேறு ஒரு நீதிமன்றம் அதனை விசாரிக்க வேண்டும். 

அதே போல ஒரு நீதிமன்றம் எந்த தீர்ப்புக் கொடுத்தாலும், அதனை உடனே நிறைவேற்றாமல் அப்பீல் காலகட்டதற்கு பிறகு நிறைவேற்ற வேண்டும்.
இதன் மூலம் நீதியை நிலைநாட்டும் அதே சூழ்நிலையில் தவறுகள் நடக்காமலும் பார்த்துக் கொள்ள முடியும். யாராளும் இரண்டு எஜமானர்களுக்கு அடிமையாக இருக்க முடியாது என்று ஏசு கூறியது அடிமைகளுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தக் கூடியது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close