சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை: விசாரணைக்குழு அறிக்கை

  அனிதா   | Last Modified : 09 Oct, 2019 01:27 pm
the-fact-that-sasikala-violated-the-prison-rules-report-of-the-inquiry-committee

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவரும் சசிகலா மீது காவல் அதிகாரி ரூபா கூறிய புகார்கள் உண்மை என விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவிற்கு, சிறை அதிகாரிகள் சிறையில் சகல வசதிகள் செய்து கொடுத்ததோடு, விதிகளை மீறி சிறையை விட்டு வெளியே ஷாப்பிங் அழைத்து சென்றதாகவும் காவல் அதிகாரி ரூபா புகார் கூறினார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள வினய்குமார் ஐஏஎஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. 

இந்நிலையில், விசாரணைக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பெங்களூரு சிறையில் சசிகலா விதிமீறலில் ஈடுபட்டதாக காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் சிறப்பு சலுகைகளைப்பெற சசிகலா லஞ்சம் கொடுத்ததாகவும், சிறையில் சசிகலாவுக்காக சமையல் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close