பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும்: ஆளுநர் நம்பிக்கை 

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2019 01:42 pm
tamil-nadu-tops-economic-growth-governor

பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் 7ஆவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கிவைத்தார். இதன்பின் பேசிய ஆளுநர், ‘பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. உலகிலேயே பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது’ என்று பேசினார்.

பொருளாதார கணக்கெடுப்பு பணியில் நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் பொது சேவை மையங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close