தமிழகம் வரும் சீன அதிபருக்கும், பிரதமருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்: தமிழக மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2019 03:10 pm
chinese-president-and-prime-minister-of-tamil-nadu-should-be-welcomed-chief-minister-s-appeal

பேச்சுவார்த்தைக்காக தமிழகம் வரும் சீன அதிபருக்கும், பிரதமருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கயில், இந்திய-சீன நாடுகளின் பேச்சுவார்த்தைக்காக தமிழ்நாட்டிற்கு வருகை புரியவுள்ள சீன அதிபருக்கும், பிரதமருக்கும் தமிழக மக்கள் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கே பெருமை சேர்க்கிறது. பேச்சுவார்த்தை நடப்பதன் மூலம் தமிழகத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது. நிகழ்ச்சிகாக மாமல்லபுரத்தை தேர்வு செய்ததற்கு பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பல நூறாண்டுகளுக்கு முன்பே சீனா, தமிழகம் இடையே வணிக, கலாசார ரீதியான தொடர்பு இருந்தது. பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரம் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது பொருத்தமானது. கடந்த 1956ஆம் ஆண்டு அப்போதைய சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வந்துள்ளார்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close