இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், ‘ நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியை பதிவு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வரும் 17ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படும். விரைவில் கட்சியை பதிவு செய்துவிட்டு சின்னம் பெற்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்’ என்று அவர் கூறியுள்ளார்.
newstm.in