பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ராமதாஸ் 

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2019 03:34 pm
pmk-ramadoss-meets-prime-minister-narendra-modi

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின், பிரதமருடன் சந்திப்பு ஏன்? என்பதற்கு ராமதாஸ் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாகவும், காவிரி - கோதவரி திட்டத்தை நிறைவேற்றுமாறும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம் என்று ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரிக்கை வைத்தோம் என்ற ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். 

பிரதமர் உடனான சந்திப்பின்போது, அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தியுன் உடனிருந்தனர்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close