இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2019 04:37 pm
aiadmk-not-supported-in-by-election-krishnaswamy

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த கிருஷ்ணசாமி, ‘  நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. சில கோரிக்கைகளை முன்வைத்து மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தோம்; கோரிக்கை நிறைவேறவில்லை. அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்தோம். தேவேந்திரகுல வேளாளர் குறித்த கோரிக்கையை அதிமுக நிறைவேற்றவில்லை’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இருந்த நிலையில், தற்போது கூட்டணி முறிந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close