‘கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 09:34 am
talks-with-krishnasamy


இடைத்தேர்தலில் ஆதரவு இல்லை என அறிவித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்ததாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை எனவும் அவர் கூறியிருந்தார். 

இந்த நிலையில், இதுதொடர்பாக  தூத்துக்குடி விமான நிலையத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இடைத்தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பதில் அளித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close