சென்னை வந்தார் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 02:15 pm
chinese-president-jinping-arrived-in-chennai

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக சீன அதிபர் ஜீ ஜிங் பிங் சென்னை வந்தார். 

தனிவிமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த சீன அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிரபரை வரவேற்றனர். மேள வாத்தியங்கள், கலை நிகழ்ச்சிகள் முழங்க தமிழக அரசு சார்பில் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து பிரத்யேக காரில் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு ஜீ ஜிங் பிங் செல்கிறார். ஓட்டல் முன்பும், 100-க்கும் மேற்பட்ட சீனர்கள் சீன அதிபரை வரவேற்க காத்துக்கொண்டிருக்கின்றனர். 

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்கும் சீன அதிபர் இன்று மாலை கோவளத்தில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். நாளை கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் பிரதமருடன் சீன அதிபர் ஆலோசனை நடத்துகிறார். இரண்டு நாடுகள் இடையே வர்த்தக மேம்பாடு, எல்லையில் அமைதி உள்ளிட்டவை பற்றி இருவரும் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close