தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 02:39 pm
view-tn-watched-shows-in-the-traditional-art-of-chinese-president

சென்னை வந்த சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கிற்கு செண்டை மேளதாளங்கள் முழங்க கலை நிகழ்ச்சிகளுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தவில், நாதஸ்வர கலைஞர்கள் இசையுடனும், மயிலாட்டம், ஒயிலாட்டம் என தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த கலை நிகழ்ச்சிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் அதிபர் கண்டு ரசித்தார். வரவேற்பு முடிந்து ஹாங்கி 5 எல் ரக குண்டு துளைக்காத பிரத்யேக காரில் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு அதிபர் புறப்பட்டார். வழி நெடுகிலும் அதிபருக்கு பள்ளி மாணவர்கள் இரு நாட்டு கொடிகளை அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, அதிபர் தற்போது ஓட்டலுக்கு வந்தடைந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close