மனிதனின் ஆற்றலுக்கு இயற்கை பேரிடர் சவாலாக உள்ளது’

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2019 04:45 pm
natural-disaster-is-challenging-for-man-s-energy

மனிதனின் ஆற்றலுக்கு இயற்கை பேரிடர் சவாலாக அமைந்துள்ளதாகவும், அதனை எதிர்கொள்ள தொலைநோக்கு திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கே.டிசி. நகரில் இதுதொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டியில்,‘மனிதனின் ஆற்றலுக்கும், திறமைக்கும் இயற்கை பேரிடர் சவாலாக அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 13 லட்சம் பேர் இயற்கை பேரிடரால் உயிரிழந்துள்ளனர்; உலகெங்கும் 440 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தொலைநோக்கு திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. 4,399 இடங்கள் மழையால் பாதிக்கப்பட கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. தேவையான நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close