‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2019 08:38 pm
i-ll-be-honest-if-chief-minister-kamalhasan

‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அதில், ‘புத்தரும், அப்துல் கலாமும் ஒன்றுதான், நாம்தான் வெவ்வேறு மரங்களாக நினைத்து பேசிக்கொண்டிருக்கிறோம். அப்துல் கலாமின் கனவுகளை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அப்துல் கலாமிடம் நான் 3 மணி நேரம் பேசியது என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது; கற்பது என்பதைவிட புரிவது என்பதே கல்வி. மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்?. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து செல்பவர்கள் தான் நடிகர்கள். கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்ந்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள்;வரவேற்பன். விவசாயம் சரியில்லை என்று வெறும் கோபத்துடன் இளைஞர்கள் அரசியல் களத்திற்கு வராதீர்கள்; முறையான பயிற்சி பெற்று விவசாயத்தை காக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்’ என்று கமல்ஹாசன் பேசினார்.

மேலும், ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்; யார் வந்தாலும் இருக்க வேண்டும். முதலமைச்சரானவுடன் முதல் கையெழுத்து என்பது குறுகிய கால விஷயம்; நீண்டகால தீர்வு சொல்கிறேன்’ என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும்,  நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளதாகவும், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று விழாவை தொடங்கி வைப்பார் என்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close