மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்

  அனிதா   | Last Modified : 20 Oct, 2019 03:15 pm
let-the-party-start-with-vijay-karunas

இயக்குநர் சந்திரசேகர் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் தன் மகன் விஜய், சகாயம் ஐ.ஏ.எஸ் ஆகியோரை இணைத்து கட்சி ஆரம்பிக்கட்டும் என நடிரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கூறியுள்ளார். 

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நடந்து வரும் தேவர் சிலை பராமரிப்பு பணிகளை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சங்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி விட்டு விட்டு தீபாவளியையொட்டி நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஐசரி கணேஷ் வேட்டி, சேலை வழங்குகிறார். இது சங்கத்தை கைப்பற்றுவதற்கான செல்படாகத்தான் தெரிகிறது. வேட்டி, சேலையை வாங்கலாமா? வேண்டாமா என்பது குறித்து சங்க உறுப்பினர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும், ஐசரி கணேஷின் இந்த செயல்பாட்டுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்மதமும் இல்லை என கூறினார். 

இடை தேர்தல் வெற்றியோ, தோல்வியோ அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும், குடிமராமத்து பணிகளை இந்த அரசு சிறப்பாக செயல்படுத்துவதாக மக்கள் கூறுவதாகவும் தெரிவித்தார். நல திட்டங்களை செயல்படுத்தும் அரசுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் என குறிப்பிட்ட அவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உணர்ச்சிவசப்பட்டு பேச கூடியவர், ஆனால் மனதளவில் யாருக்கும் பாதகம் நினைக்க மாட்டார் என தெரிவித்தார். 

இயக்குநர் சந்திரசேகர் தமிழக அரசியலில் ஊழல் இருப்பதாக குற்றம்சாட்டியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,  இயக்குநர் சந்திரசேகர் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால்  அவரது மகன் விஜய், சகாயம் ஐ.ஏ.எஸ் ஆகியோரை இணைத்து கட்சி ஆரம்பிக்கட்டும் என கூறினார். மேலும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அவரை  நிச்சயம் சந்திப்பேன் என தெரிவித்தார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close