பாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல: சீமானுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி 

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2019 04:37 pm
bjp-is-not-an-untouchable-party-minister-rajendra-balaji

பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

சிவகாசியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்றும், பாஜக ஆளும் மாநிலங்களில் மதக் கலவரமோ, இனக் கலவரங்களோ ஏற்பட்டதில்லை என்றும், பாஜக ஊதுகுழலாக அமைச்சர் செயல்படுகிறார் என சீமான் கூறியதற்கு இவ்வாறு பதில் அளித்தார்.

மேலும், அரசியல் விமர்சகர்களே சிரிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சு உள்ளதாகவும், ரஜினிகாந்த் நல்ல மனிதர்; விமர்சிக்கும் அளவிற்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close