தேர்தல் விதியை மீறியதாக வசந்தகுமார் எம்.பி. மீது வழக்குப்பதிவு 

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2019 07:10 pm
vasanthakumar-mp-says-he-has-violated-election-rules-case-record

தேர்தல் விதியை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்ததாக வசந்தகுமார் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், தனது சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

நாங்குநேரி தொகுதிக்குள் செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து, தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் கொடுத்த புகாரில் எம்.பி.வசந்தகுமார் மீது நாங்குநேரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தேவையின்றி கூட்டத்தை கூட்டுதல், சம்பந்தமில்லாத நபர் தொகுதிக்குள்  நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நாங்குநேரி காவல்நிலையத்தில் இருந்து தனது சொந்த ஜாமீனில் வசந்த குமார் எம்.பி. விடுவிக்கப்பட்டார்.

இதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘என் வீடு உள்ள பாளையங்கோட்டைக்கு போலீசார் கூறிய சாலையில்தான் சென்றேன். கைதியை அழைத்து செல்வது போல் காவல் நிலையத்துக்கு என்னை அழைத்து வந்தனர்’ என்று  வசந்த குமார் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close