3 தொகுதி தேர்தல்: மொத்த வாக்குப்பதிவு விவரம் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2019 09:16 pm
3-batch-election-total-ballot-details-release

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜ்நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மூன்று தொகுதிகளின் மொத்தம் வாக்குப்பதிவு விவரங்கள் வெளியாகியுள்ளது.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 66.35% வாக்குகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 84.36% வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதேபோல், புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 69.44% வாக்குகள் பதிவாகியுள்ளது. காமராஜ் நகர் தொகுதியில் 35,009 வாக்காளர்களில் 24,310 பேர் வாக்களித்துள்ளதாகவும், எந்தவித அசம்பாவிதமுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close