போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு நாளை மறுநாள் முதல் போனஸ்; நாளை முதல் முன்பணம் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கரூரில் அமைச்சர் அளித்த பேட்டியில், ‘போக்குவரத்து ஊழியர்களுக்கு 20% போனஸ் நாளை மறுநாள் வழங்கப்படும். நாளை முதல் தீபாவளி முன்பணமாக ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். போக்குவரத்து துறையின் 1.36 லட்சம் ஊழியர்களுக்கு ரூ.206 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
newstm.in